Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!

#image_title

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!

யாருக்கு வேண்டுமாலும் சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உருவாக பல காரணங்கள் சொன்னாலும் எதனால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தெளிவான விளக்கம் இல்லை.

40, 50 வயதை கடந்தவர்கள் அனுபவிக்க கூடிய சர்க்கரை நோய் பாதிப்பு இன்று பிறந்த குழந்தைக்கு இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்று. இந்த சர்க்கரை விரட்ட மஞ்சள் பூசணியை எடுத்துக் கொள்வது நல்லது. இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வல்லது.

தேவைப்படும் பொருட்கள்:

மஞ்சள் பூசணி
மிளகு
சீரகம்
வெந்தயம்
உப்பு
நல்லெண்ணெய்

ஒரு கீற்று மஞ்சள் பூசணி எடுத்து அதன் தோலை அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து 1/4 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பூசணி துண்டுகள், எடுத்து வைத்துள்ள மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிது தூள் உப்பு மற்றும் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிடவும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கட்டுக்குள் இருக்கும்.

இவ்வாறு அரைத்தும் சாப்பிடலாம். அரைக்காமல் வதக்கியும் சாப்பிடலாம்.

Exit mobile version