Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

80 வயதிலும் 20 வயது போல் இருக்க இந்த ஐந்து பொருளை இப்படி ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

#image_title

80 வயதிலும் 20 வயது போல் இருக்க இந்த ஐந்து பொருளை இப்படி ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

காலையில் வெறும் வயிற்றில் இந்த பதிவில் கூறப்படும் பொருட்களை சாப்பிட்டு வந்தால் 80 வயது உள்ளவர்களும் 20 வயதுள்ளவர்களை போலவே நன்கு ஆற்றலுடனும் சுறுசுறுப்பாகவும் செயல்பட உதவும். அந்த 5 பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.

 

காலையில் இந்த 5 பொருட்களை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளும் குணமாகும். அதாவது நமக்கு ஏற்படும் உடல் வலி, உடல் சோர்வு குணமாகும். ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்த உற்பத்தி அளவும் அதிகரிக்கும். கண்பார்வை அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். இரத்தம் சுத்தமாக மாறும். முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சருமம் பொலிவு பெறும்.

 

அந்த 5 பொருட்கள்;

 

* பாதாம் பருப்பு

* கருப்பு கொண்டை கடலை

* உலர்ந்த திராட்சை

* பாசிப்பயிறு

* நிலக்கடலை

 

இதை தயார் செய்யும் முறை;

 

முதலில் பாதம் பருப்பு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கருப்பு கொண்டைக் கடலை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உலர்ந்த திராட்சை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பயிறு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நிலக்கடலை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த 5 பொருட்களையும் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு இதில் இந்த 5 பொருட்களும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தூங்கச் செல்லும் முன்பு ஊற வைக்க வேண்டும்.

 

மறுநாள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும்(எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு பின்னர் சகறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்). பின்னர் 10 நிமிடம் கழித்து ஊறவைத்த இந்த பொருட்களை இரண்டு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

 

இந்த பொருட்களை அப்படியே வேக வேகமாக சாப்பிடாமல் மெதுவாக மென்று ருசித்து சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் பொழுது உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ் நீர் நம் உடலுக்கு ஆரோக்கியமான உமிழ்நீர் ஆகும். இந்த உமிழ்நீர் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் செல்லும் பொழுது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றது.

 

இந்த உமிழ்நீர் நம் உடலுக்குள் செல்லும் பொழுது ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் ஜீரணம் சரியான முறையில் நடந்து மலச்சிக்கல பிரச்சனை சரியாகும். அது மட்டுமில்லாமல் இரத்தம் சுத்தமாகும்.

 

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கும் சத்துக்களை பிரித்து நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்களை கொண்டு சேர்க்கின்றது.

 

இதை சாப்பிடும் பொழுது ஏற்படீம் உமிழ்நீர் நம் உடலுக்குள் சென்று நம் உடல் உறுப்புகளை பலப்படுத்துகின்றது. மேலும் நரம்புகளுக்கு நல்ல வலுவை கொடுக்கின்றது. மேலும் நரம்புகளை உறுதிப்படுத்துகின்றது.

 

இதனால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். கண்பார்வை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு சரியாகும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஹீமோகுளோபின் அளவை சரியான முறையில் பார்த்துக் கெள்ளும். இரத்த உற்பத்தியை அதிகரிக்கின்றது. நீர்ச்சத்து குறைபாட்டை இது சரிசெய்கின்றது. இதை சாப்பிடுவது மட்டுமில்லாமல் சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இதனால் உடல் நன்கு கட்டுக் கோப்புடன் இருக்கும்.

 

இதனை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும். உடலில் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

 

இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அனைத்து பருப்புகளும் இருக்கும் வகையில் ஒரு ஸ்பூன் கொடுக்க வேண்டும். இதை தினமும் சாப்பிட்டு உடலுக்கு தேவையான பலன்களை பெற்று ஆரோக்கியமாக வாழுங்கள்.

 

Exit mobile version