இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் பெற வேண்டுமா? அப்போ ஆப்பிள் சீடர் வினிகரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!
நமக்கு முகத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை சரி செய்து இழந்த இளமை தோற்றத்தை பெறுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம்.
நாம் நமது வயதான தோற்றத்தை மறைக்க நிறைய சிகிச்சைகள் எடுத்திருப்போம். எடுத்துக்காட்டாக முகத்தில் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்துகள் போல பல வழிமுறைகளை பயன்படுத்தி இருப்போம். தற்காலிகமாக பயன்கள் தந்து முகத்தின் சருமத்தை மேலும் பாதித்திருக்கும். இதை சரி செய்ய ஆப்பிள் சீடர் வினிகரை இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் முறையில் பயன்படுத்தினால் இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் பெறலாம்.
இளமை தோற்றத்தை திரும்ப பெறுவதற்கு தேவையான பொருள்கள்…
* ஆப்பிள் சீடர் வினிகர்
* வெங்காயச் சாறு
இதை பயன்படுத்தும் முறை…
ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் சிறிதளவு வெங்காயச் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கலந்து கொண்டு பின்னர் இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்ய வேண்டும். இதனால் இளமை தோற்றத்தை மீண்டும் பெறலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரின் மற்ற நன்மைகள்…
* ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகின்றது.
* ஆப்பிள் சீடர் வினிகரானது பசி உணர்வை கட்டுப்படுத்துகின்றது.
* இரத்தத்தில் உள்ள உயர் சர்க்கரை அளவை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இந்த ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுகின்றது.
* ஆப்பிள் சீடர் வினிகர் நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனையை சரி செய்கின்றது.
* ஆப்பிள் சீடர் வினிகர் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தருகின்றது.
* ஆப்பிள் சீடர் வினிகரில் கரையக்கூடிய பெக்டின் எனப்படும் நார்ச்சத்து இருப்பதால் இது நமக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை குணப்படுத்துகின்றது.
* ஆப்பிள் சீடர் வினிகரில் இருக்கும் கிருமி நாசினியானது தோல் மற்றும் நகங்களில் உள்ள கிருமிகளை நீக்குகின்றது.