நீங்கள் 2000-க்கு முந்தைய வருடத்தில் பிறந்தவராக இருந்தால் இதனை உடனே செய்யுங்கள்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!!
ஒரு குழந்தை பிறந்ததும் அதன் பிறப்பினை அரசு பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.இது தனியார் மற்றும் அரசு மருத்தவமனைகள் இரண்டிற்குமே பொருந்தும்,அப்படி பதிவு செய்வதன் மூலம் அந்த குழந்தையின் பிறப்பு உறுதி செய்யப்படுகிறது.இதன் வழியாக இந்திய நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகையினையும் அந்த குழந்தையால் பெற முடியும்.
எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை குழந்தை பிறந்த உடனே,அரசு அலுவலங்களில் விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ள வேண்டும்,ஏனெனில் பிறப்பு சான்றிதழ் 21 நாட்களுக்குள் கிடைத்து விடும்.ஆனால் குழந்தையின் பெயரினை சான்றிதழ்களில் சேர்க்க 12 மாதம் காலக் கெடு உள்ளது.அதற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து பெயர் பதவிடப்பட்ட சான்றிதல்களை பெற்று கொள்ளலாம்.
இந்த நிலையில் தான் இந்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது 01/01/2000-க்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்தவர்கள் மற்றும் அதற்கு பிறகான 15 ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்கள் சான்றிதழ்களை வரும் 31.12.2024-தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் குழந்தையின் பெயரின்றி இருக்கும் பிறப்பு சான்றிதழ் உரிய அலுவலர்களிடம் (நகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி)அதற்கு தேவையான ஆவணத்தை காண்பித்து பெறலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளது.
மேலும் இனி பிறப்பு சான்றிதழ்களை பெற கால அவாசம் நீட்டிக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.அதனால் மக்கள் அனைவரும், சீக்கிரம் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பு சான்றிதழ்களை எளிய முறையில் பெறுவதற்கு உடனே ஆயத்தமாகுங்கள்.