Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

#image_title

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடும்.காரணம் ஒருமுறை கடனாளியாகிவிட்டால் வாழ்வில் நிம்மதி,தூக்கம் போய்விடும்.சிறு தொகையாக இருந்த கடன் வட்டி மேல் வட்டி என்று பெரிய கடனாக மாறி விடும்.

தற்பொழுது மீட்டர் வட்டி,ராக்கெட் வட்டி என்று ஏகப்பட்ட வட்டிகள் வந்து விட்டது.விலைவாசி உயர்வு,குறைவான சம்பளம் போன்ற காரணங்களால் மக்களும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கும் நண்பர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் விரைவில் கடன் அடைந்து விடும்.

இந்த பரிகாரத்தை திங்கட் கிழமை அன்று தான் செய்ய வேண்டும்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் அகல் விளக்கு,திரி,நல்லெண்ணெய் மட்டுமே.

வாரந்தோறும் திங்கட் கிழமை அன்று உங்கள் வீட்டருகில் உள்ள பைரவர் கோயிலுக்கு செல்லவும்.அங்குள்ள பைரவருக்கு முன் ஒரு மண் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.

பின்னர் வாங்கிய கடன் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு 9 திங்கட் கிழமை பைரவருக்கு விளக்கு போட்டு வழிபட்டு வந்தால் வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும்.

Exit mobile version