Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!

#image_title

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!

வீட்டில் பணம்,செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு லட்சுமி குபேரர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.செல்வ செழிப்போடு நிம்மதியான வாழ்க்கை வாழ செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி குபேரரை வீட்டு பூஜை அறையில் வைத்து முறையாக வணங்கி வழிபாடு செய்ய வேண்டும்.

அதுமட்டும் இன்றி வாரத்தில் ஒருநாள் பரிகாரம் செய்து வர வேண்டும்.இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள் கொட்டை பாக்கு,வெற்றிலை,ஏலக்காய்,ஒரு ரூபாய் நாணயம்.

முதலில் வீட்டு பூஜை அறையில் உள்ள லட்சுமி குபேரர் படத்திற்கு மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து மாலை சாற்றவும்.

அதன் பிறகு ஒரு காமாட்சி விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.பிறகு இரண்டு வெற்றிலையை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கொட்டை பாக்கு 18 என்ற எண்ணிக்கையில் வைக்கவும்.பிறகு இதில் 18 ஏலக்காய் மற்றும் 1 ரூபாய் நாணயம் ஒன்று வைத்து பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு வாரம் ஒருமுறை லட்சுமி குபேரர் பரிகாரம் செய்து வந்தால் பணத் தடை நீங்கி அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்.

Exit mobile version