உங்கள் குலதெய்வத்தை இந்த நாளில் இப்படி வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும்!!

0
167
If you worship your family deity like this on this day you will get perfect grace!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. சந்ததி முடிந்துவிடாமல் தொடரவே இந்த குலதெய்வ வழிபாடு செய்யப்படுகிறது. அனைவரும் ஆண்டிற்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். உங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் பலர் இருந்தாலும் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும்.

உங்கள் குலதெய்வத்தை அமாவாசை,பௌர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் தவறாமல் வழிபட வேண்டும். உங்கள் குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கலிட்டு வெற்றிலை பாக் கு பழம் வைத்து வழிபட்டால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

நீங்கள் தவறாமல் குலதெய்வ வழிபாடு செய்து வந்தீர்கள் என்றால் பணக் கஷ்டம்,கடன் பிரச்சனை,உடல் நலக் குறைவு போன்றவை நீங்கி வாழ்வில் செழிப்பு உண்டாகும்.நீங்கள் புதியதாக தொழில் தொடங்கினாலோ அல்லது வீட்டில் சுப நிகழ்வு நடைபெறுகிறது என்றாலோ அதற்கு முன் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

குலதெய்வத்தை அமாவாசை நாளில் வழிபட்டால் குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். அமாவாசை நாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று அரிசி மாவில் செய்யப்பட்ட விளக்கில் விளக்குஎண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும்.

அதேபோல் மண்விளக்கில் தீபம் ஏற்றி எலுமிச்சம் பழத்தை சூலாயுதத்தில் குத்தி வைத்து வழிபாடு செய்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.பங்குனி உத்திரம்
குலதெய்வத்தை வழிபட மிகவும் உகந்த நாளாகும்.அதேபோல் திங்கள்,செவ்வாய்,புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குலதெய்வத்தை வழிபடலாம்.