Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் கால்களின் விரல்கள் இவ்வாறு இருக்கிறதா!!அப்போ உங்கள் குணங்கள் இப்படித்தான் இருக்கும்!!

If your toes are like this!!then your qualities will be like this!!

If your toes are like this!!then your qualities will be like this!!

நம்முடைய கால் பாதங்களின் வடிவத்திற்கும் நமது குணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாத வடிவங்கள் இருக்கும். பாதத்தின் வடிவங்களும் வேறுபடும் அதேசமயம் விரல்களின் அமைப்பும் ஒவ்வொருவரிடமும் வேறுபடும். அத்தகைய பாதங்களின் வடிவங்களை வைத்தே ஒருவருடைய குணாதிசயங்களை கூற முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
சதுர வடிவ பாதம்: உங்கள் கால் பாதம் சதுர வடிவத்திலும், அனைத்து கால் விரல்களும் ஒரே அளவில் இருந்தால், நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? யதார்த்தமும், நம்பகத்தன்மையும் நிறைந்தவர். நேரத்தையும், உங்களிடம் இருக்கும் திறமைகளையும் சரியாக பயன்படுத்தும் நீங்கள் ஒரு கடுமையான உழைப்பாளி. கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவராக இருப்பீர்கள். மற்றவர்களோடு சகஜமாக பழகக் கூடியவராக இருப்பதால், எளிதாக அடுத்தவரோடு நட்பு பாராட்டுவீர்கள்.
ரோமன் பாதம்: உங்கள் காலின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்கள் ஒரே உயரத்திலும் நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்கள் இறங்குமுகத்திலும் இருந்தால், இதனை ரோமன் பாதம் என அழைப்பார்கள். ரோமன் பாதம் உள்ள நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? அன்புள்ளம் கொண்ட நீங்கள் அடுத்தவர்களோடு எளிதாக பழகக் கூடியவர். புதிய மனிதர்களை சந்திக்கவும், அவர்களோடு உறவுமுறையை வளர்த்துக் கொள்ளவும் ஒருபோதும் தயங்க மாட்டீர்கள். உங்களின் நெட்வொர்க் மிகப்பெரியது. உங்கள் கருத்தை தன்னம்பிக்கையோடும், உறுதியாகவும் கூறுவீர்கள்.
எகிப்திய பாதம் : உங்களின் பெருவிரல் நீளமாகவும், அதனை தொடர்ந்துள்ள விரல்கள் 45 டிகிரி கோணத்தில் இறங்கு வரிசையிலும் இருந்தால், அதற்கு எகிப்திய பாதம் எனப் பெயர். இந்தப் பாதம் உள்ள நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? சுயமாக யோசிக்கக்கூடியவராக இருப்பீர்கள். உங்களிடம் பிடிவாத குணம் இருந்தாலும் படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். அடுத்தவர்களை உங்கள் வழிக்கு ஒத்துக்கொள்ள வைப்பதில் சாமர்த்தியமானவர். அடுத்தவர்களின் ரகசியங்களை பேணிக் காப்பதால் நம்பகமான மனிதராக இருப்பீர்கள்.
கிரேக்க பாதம்: உங்கள் பெருவிரலைவிட இரண்டாம் விரல் நீளமாக இருந்தால், அதை கிரேக்க பாதம் என அழைப்பார்கள். இதை நெருப்பு பாத வடிவம் என்று அழைப்பதுண்டு. இந்த பாதம் உள்ள நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? படைப்பாற்றலும், உணர்ச்சிமிக்கவருமான நீங்கள் உள்ளுணர்வோடு இயங்குபவராக இருப்பீர்கள். சாகச குணம் உங்கள் இயல்பிலேயே இருக்கும். புதிய சவால்களை ஆர்வத்தோடு எதிர்கொள்வீர்கள். பல வித்தியாசமான வழிகளில் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள முயல்வீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

Exit mobile version