துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!
அமீரக பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது.
இதில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அழகாபுரம் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் , திமுக , அதிமுக , தேமுதிக , மதிமுக மற்றும் ஈமான் பண்பாட்டு மையத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை அருந்தி நோன்பை திறந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.