காஞ்சிபுரம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.. அறிவிப்பில் junior reaserch fellow பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தெரிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இந்த பதிவின் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம்.
தற்சமயம் வெளியாகி இருக்கின்ற அறிவிப்பின் அடிப்படையில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு என ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு காலி பணியிடம் மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் இந்த பணிக்கு தொடர்புள்ள பி .டெக் உள்ளிட்ட படிப்புகளில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் பதிவு செய்பவர்கள் கட்டாயமாக 35 வயதிற்கு மிகாமலிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிஆர்எஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் திறமைவாய்ந்த நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ 10,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையதள நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு நாளையே கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமிருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன இணைப்பின் மூலமாக அதிகாரபூர்வமான தளத்தில் இருக்கின்ற விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அத்துடன் கேட்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Online Apply Link