இந்த பனி காலத்தில் சிலருக்கு நீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் ஏற்படும் அவர்கள் எல்லாம் உணவில் இளநீரை சேர்த்து கொண்டால் அந்த பாதிப்பு குறையும்.உடல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களும் அல்சர் உள்ளவர்களும் இளநீரை வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம். இளநீரில் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை உள்ளதால் ரத்ததில் கலந்துள்ள தேவையற்ற சத்துகளை நீக்கும். இத்தனை நன்மைகள் உள்ள இளநீரில் சூப்பரான டிலைட் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தேவையானவை:
பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை – ஒரு கப் (பொடியாக நறுக்கி கொள்ளவும்), பால் – 3 கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்பால் – ஒரு கப்.
செய்முறை :
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து பாலை காய்ச்சி கொள்ளவும்.சுண்ட காய்ச்சியதும் அதனை ஆறவைத்து கொள்ளவும். பால் ஆறியதும் அதில் இளநீர் வழுக்கையை சேர்த்து கொள்ளவும். அதனுடன் தேங்காய் பால் சேர்த்து 15 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்தால் சுவையான இளநீர் டிலைட் தயார்.