Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியான சில நொடிகளில் ஆயிரங்களை கடந்த இளைய தளபதியின் “நா ரெடி” பாடல் புரோமா ! அதிரடி காட்டிய லியோ!! 

Ilaya Thalapathy's Na Ready song Prooma crossed thousands within seconds of its release! Action Leo!!

Ilaya Thalapathy's Na Ready song Prooma crossed thousands within seconds of its release! Action Leo!!

வெளியான சில நொடிகளில் ஆயிரங்களை கடந்த இளைய தளபதியின் “நா ரெடி” பாடல் புரோமா ! அதிரடி காட்டிய லியோ!! 

தற்போது லியோ படத்தின் நா ரெடி பாடலின் புரோமா வெளியாகி வைரலாகி வருகிறது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் தான் லியோ. இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.  அதன் ரெகார்டிங் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் லியோ படத்தின் பர்ஸ்ட்  சிங்கள் விஜய் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வந்தனர்.

இதையடுத்து இன்று மாலை லியோ படத்தின் நா ரெடி பாடலின் புரோமோ வெளியிடப்படும் என அறிவிப்பு வந்ததை தொடர்ந்து சற்று முன் வெளியாகி அதிக லைக்குகளை பெற்று வருகிறது. லோஹேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார். அதில் அவர் இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் அண்ணா . happy birthday vijay anna என கூறியுள்ளார்.

 

Exit mobile version