Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அந்த விஷயத்தில் இளையராஜா ரொம்ப மோசம்… – பரணி ஓபன் டாக்!

அந்த விஷயத்தில் இளையராஜா ரொம்ப மோசம்… – பரணி ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் பிலபர இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எம்.எஸ்.வி.க்கு பிறகு தன் இசையில் மக்களை சுண்டி இழுத்தவர் இளையராஜா. இவரை அவரது ரசிகர்கள் இசைஞானி என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீப காலமாக இளையராஜா குறித்து சில விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இளையராஜா யாரையும் மதிப்பது கிடையாது. அவருக்கு மறைமுகமான ஒரு கர்வம் இருக்கிறது என்று நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜாவுடன் 5 வருடம் உதவியாளராக இருந்து பணியாற்றியவர் இசையமைப்பாளர் பரணி. இவர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் இளையராஜா குறித்து பல விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்து கொண்டார்.

என்னை ஒருமுறை எம்.எஸ்.வியிடம் நடிகர் விவேக் அழைத்துக் கொண்டு போனார். என்னைப் பார்த்ததும் எம்.எஸ்.வி. கட்டியணைத்துக் கொண்டார். உங்கள் பாடலை நான் கேட்டிருக்கிறேன். அருமையாக பணியாற்றுகிறீர்கள் என்று தட்டிக்கொடுத்தார்.

நான் இளையராஜாவுடன் 5 வருடங்களாக உதவியாளராக பணியாற்றி இருக்கிறேன். ஆனால், ஒருமுறை கூட அவர் என்னை பாராட்டியதே கிடையாது.

ஆனால், ஏ.ஆர்.ரகுமான் அப்படி இல்லை. எம்.எஸ்.வி.யிடம் இருக்கும் அந்த மென்மையான குணம் அவரிடம் நான் பார்த்தேன். இதன் பிறகு நான் ஏ.ஆர்.ரகுமானிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். மேலும், என்னிடம் எப்போதும் தொடர்பிலேயே இருங்கள். நான் உங்களை அழைப்பேன் என்று கூறியதாக அந்த பேட்டியில் அவர் மனம் விட்டு பேசினார்.

 

Exit mobile version