Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினியின் கூலி படத்திற்கு எண்டு கார்டு போட்ட இளையராஜா!! அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்!!

Ilayaraja sent notice against Rajini Coolie movie

Ilayaraja sent notice against Rajini Coolie movie title

ரஜினியின் கூலி படத்திற்கு எண்டு கார்டு போட்ட இளையராஜா!! அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்!!

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படம் என்றால் எல் சி யு குறித்து எந்த அளவிற்கு பேசப்படுகிறதோ அந்த அளவிற்கு அவர் படத்தில் வைக்கப்படும் பழைய ரீமேக் பாடலும் பெருமளவில் ட்ரெண்டாகும்.

அந்த வகையில் கூலி திரைப்படத்தின் டீசரானது சில தினங்களுக்கு முன்பு வெளியானது.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதுமட்டுமின்றி வழக்கம்போல் இந்த படத்திலும் பழைய படத்தின் பாடல் ஒன்றை ரீமேக் செய்து வைத்துள்ளனர்.ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள வா வா பக்கம் வா பாடல் இளையராஜா இசையமைத்தது.அப்பொழுதே அது பெரும் ஹிட் அடித்தது.

தற்பொழுது அந்தப் பாடலை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இந்த கூலி திரைப்படத்தில் ரீமேக் பாணியில் வைத்துள்ளார்.ஆனால் இந்தப் பாடலை படத்தில் வைப்பது குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவிடம் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை.இதனால் இளையராஜா அவர்கள் இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் முறையாக அனுமதி பெறாமல் பாடல் வைத்ததால் அதனை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கு உரிய அனுமதியை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேற்கொண்டு அனுமதி பெறவில்லை என்றால் கட்டாயம் சட்டரீதியாக சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.இளையராஜா இவ்வாறு சன் பிக்சர்ஸ்-க்கு  எதிராக நோட்டீஸ் அனுப்பியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Exit mobile version