இவரெல்லாம் கருவறைக்குள் நுழையக் கூடாது.. இளையராஜாவுக்கு வந்த தீண்டாமை பிரச்சனை!! வரிந்து கட்டி வந்த திமுக!!

0
97
Ilayaraja's untouchability problem

DMK: இளையராஜா ஸ்ரீ வில்லிபுதூர் கோவில் கருவறைக்குள் நுழையவிடாமல் தடுத்தது குறித்து திமுக தனது ஆதரவு குரலை கொடுத்து வருகிறது.

தமிழக சினிமா திரைத்துறையில் இந்துத்துவாதி-க்கு பெயர் போனவர் இளையராஜா தான். அவருக்கே  ஸ்ரீ வில்லிபுதூர் கோவிலில் தீண்டாமை விதிமீறல் நடந்துள்ளது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து பேசி வருகின்றனர். விருதுநகர் ஸ்ரீ வில்லிபுதூர் ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 108 திவ்ய தேசங்களில் இது மிகவும் முக்கியமான திருத்தலம்.

இந்த கோவிலுக்கு நேற்று இளையராஜா சென்றுள்ளார். அப்பொழுது சாமி தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்ற பொழுது அங்கிருந்த ஜீயர்கள் அதை அனுமதிக்கவில்லை. வெளியேறும் படி கோஷமிட்டதுடன், குறிப்பிட்ட சாதியினரால் கருவறைக்குள் செல்ல அனுமதியில்லை என கூறியுள்ளனர்.

மேற்கொண்டு படி மண்டத்திலேயே அனைத்து மரியாதையும் இளையராஜாவுக்கு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கருவறைக்குள் வரக் கூடாது என்பற்கான காரணம் கூறப்பட்டது. சாமி தரிசனம் முடிந்ததும் அவர்கள் கோஷத்தால் அங்கிருந்து உடனடியாக இளையராஜா கிளம்ப நேரிட்டது. இது குறித்து சினிமா துறையில் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.    

இதுக்குறித்து திமுக தொடர் இணை செய்தியாளர் கூறியதாவது, இப்போ எல்லாம் யார் சாதி பாகுரங்கா?? இது இந்துத்துவாவின் கோர முகம்!! திறமைக்கு இங்கெல்லாம் மதிப்பில்லை.. சாதியை வைத்து கொண்டாடுவதா என விமர்சித்துள்ளார். பாஜக தற்பொழுது வரை இதுகுறித்து வாய் திறக்காத பொழுது ,  திமுக மட்டும் முன் வந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது.