Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண் குழந்தை பெற்றெடுத்த இலியானா! ரசிகர்கள் வாழ்த்து!

ஆண் குழந்தை பெற்றெடுத்த இலியானா! ரசிகர்கள் வாழ்த்து!

 

நடிகை சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர் நடிகை இலியானா.இவர் தமிழ்,இந்தி,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் ‘கேடி’ என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.பின்னர் விஜய் அவர்களுடன் ‘நண்பன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

 

இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பட கலைஞர் ‘ஆண்ட்ரூ’ என்பவரை காதலித்து வந்தார்.பிறகு சில காரணங்களால் அவர்களின் காதல் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகின்றது.அதன் பின்னர் நடிகை’ கத்ரீனா கைஃப்’ அவர்களின் சகோதரர் ‘செபாஸ்டின் லாரன்ட் மைக்கேல்’ என்பவருடன் இலியானா டேட்டிங்கில் இருக்கின்றார் என்ற தகவல் வெளியானது.இந்நிலையில் இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலை தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

 

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த தகவலை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் குழந்தைக்கு ‘Koa Phoenix Dola ‘என பெயர் சூட்டியுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவரது ரசிகர்கள் தற்பொழுது இலியானாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகினறனர்.

 

 

ஆனால் குழந்தை பெற்றெடுத்த பின்னரும் இலியானா தான் கர்ப்பம் தரிக்க யார் காரணம் என இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version