Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாயையும், குழந்தையையும் கறி வெட்டுவதை போல் எலும்பும், சதையுமாக வெட்டி கொலை செய்த கொடூரம்..!

கறி வெட்டும் கத்தியால் தாயையும், ஒன்றரை வயது குழந்தையும் கண்டந்துண்டமாக வெட்டி சதையும், எலும்புமாக குளத்தில் வீசிய கொடூர சம்பவம் தேனி அருகே அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த க.புதுப்பட்டியை சேர்ந்த 22 வயதான கலைச்செல்விக்கு மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த காசிராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சர்மா என்ற பெயரில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி கலைச்செல்வியையும், குழந்தையையும் காணவில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், உத்தமபாளையம் காவல்நிலையத்தில் கலைச்செல்வியின் தந்தை புகார் அளித்தார்.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு 7 மாதங்களுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது. போலீசாரின் தொடர் விசாரணையில் காசிராஜனை திருமணம் செய்வதற்கு முன்னதாக கலைச்செல்விக்கு சின்னமனூரை சேர்ந்த திருமணமான சிலம்பரசன் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதனை அடிப்படை ஆதாரமாக கொண்டு சிலம்பரனிடம் போலீசாரின் கவனம் திரும்பியது.

சிலம்பரனிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க அந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் சிலம்பரசனுக்கும், கலைச்செல்விக்கும் திருமணத்திற்கும் பிறகும் தொடர்பு இருந்துள்ளது. இந்த தகாத உறவு காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே தானும், தனது கறிக்கடையில் வேலைப்பார்க்கும் ராஜேஸ் என்பவரும் சேர்ந்து கலைச்செல்வியையும், அவரது குழந்தையையும் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

கறிவெட்டும் கத்தியால் இருவரையும் கண்டம் துண்டமாக வெட்டி கறியும், எலும்புமாக 3 சாக்கு மூட்டையில் போட்டி அய்யனார் குளத்தில் வீசியதாகவும் சிலம்பரசன் கொடூர வாக்குமூலத்தை அளித்துள்ளான். இந்த கொலை நடந்து 7 மாதங்கள் ஆகி உள்ளதால் எழும்புகளை மட்டும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தகாத உறவால் குழந்தை என்றுக்கூட பாராமல் எலும்பும், சதையுமாக வெட்டி கொலை செய்த அரக்கனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version