Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரவு பணிக்கு சென்ற கணவன்! ரஞ்சித்துடன் ராத்திரியை அனுபவித்த ராட்சஷி! நள்ளிரவில் நடந்த திகல் சம்பவம்.??

இரவு பணிக்கு சென்ற கணவன்! ரஞ்சித்துடன் ராத்திரியை அனுபவித்த ராட்சஷி! நள்ளிரவில் நடந்த திகல் சம்பவம்.??

கள்ளக்காதலுக்காக கணவனையே கழுத்தை நெரித்து கொலை செய்த திகில் சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வி.அரியலூர் கிராமத்தில் வசித்து வரும் ராஜகுமரன், லதா தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் சங்கவி என்ற பெண் குழந்தை உள்ளார். லதாவின் கணவர் ராஜகுமரன் சொந்தமாக கார் ஒன்றை வாங்கி விழுப்புரத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி ராஜகுமரன் அண்ணன் முத்துக்குமரன் வீட்டிற்கு சென்ற லதா, தனது கணவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாக கண்ணீருடன் கூறியுள்ளார். இதனையடுத்து உள்ளூரைச் சேர்ந்த மருத்துவரை அவசரமாக அழைத்து வந்து உடனடியாக சோதனை செய்ததில், ராஜகுமரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு ராஜகுமரன் எப்படி இறந்தார் என்று லதாவிடம் உறவினர்கள் கேள்விகேட்டதற்கு, தனக்கு எதுவும் தெரியாது என்று முதலில் கூறிய லதா பின்னர், காதுவலி தாங்க முடியாமல் அவரே கழுத்தை அறுத்துக் கொண்டதாக மழுப்பலுடன் பதில் கூறினார்.

இதனையடுத்து, தம்பியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முத்துக்குமரன் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜகுமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிறகு, லதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை அல்ல கொலைதான் என்பது தெரியவந்தது.

கணவரின் நண்பர் ரஞ்சித் என்பவருடன் தான் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததை லதா ஒப்புக்கொண்டார். லதாவும் ரஞ்சித்தும் தனிமையில் உல்லாசமாக இருந்த விஷயம் ராஜகுமரனுக்கு தெரியவர, மனைவி மற்றும் அவரது நண்பரையும் கண்டித்துள்ளார். இதன் பின்னரும் இருவருக்குமான தவறான பழக்கம் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் இரவுப்பணி காரணமாக செஞ்சிக்கு சென்ற லதாவின் கணவர் இரவு 1 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் ரஞ்சித்துடன் சேர்ந்து லதா உல்லாசமாக இருப்பதை கண்டு ராஜகுமரன் அதிர்ச்சியடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் லதாவும், ரஞ்சித்தும் சேர்ந்து கழுத்தை நெரித்து அவரை கொன்றதாக கூறப்படுகிறது. தவறான உறவிற்காக கணவனையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version