என் கதையில நான் வில்லன்டா… இருப்பினும் அதிலும் நான் நல்லவன்டா…
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் – போனி கபூர் – எச்.வினோத் இரண்டாவது முறையாக இணைந்த படம் வலிமை. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடிகை ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் கன்னடம் உளிட்ட பல மொழிகளில் வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் விருப்பப்படமாக அஜித்தின் ‘வலிமை’ அமைந்துள்ளது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்திற்காக, அஜித்துடன் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச்.வினோத் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
‘வலிமை’ படம், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதுபோல், அஜித்தின் அடுத்த படத்தில் நடைபெறாமல், படத்தை விரைந்து முடித்து தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இரண்டு கதாபாத்திரத்திலும் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நாயகியாக அதிதி ராவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.