தொகுப்பாளர் செய்த உருவ கேலி!! நெத்தியடி பதில் கூறிய அட்லீ!!

0
87

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் ஆனது ஹிந்தியில் பேபி ஜான் திரைப்படமாக உருவாக்கி வருகிறது.வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக அட்லீ அறிமுகமாகிறார்.

 

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் ப்ரோமேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ உருவ கேலி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு உரைக்கும் படியான பதிலை தெரிவித்து இருக்கிறார்.

 

பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடந்ததாவது :-

 

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கபில் சர்மா, அட்லீயிடம் முதல் முறையாக ஒரு ஸ்டாரை நீங்கள் சந்திக்கும் போது அவர்கள், “அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?” என்று உருவ கேலி செய்ததுடன் ஒரு வித அகங்காரத்தோடும் கேட்டிருக்கிறார். இந்த கேள்வி அட்லீக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அட்லீ இதற்கு சரியான பதிலை வழங்கி இருக்கிறார்.

 

உங்கள் கேள்வியின் நோக்கத்தை என்ன என்று என்னால், புரிந்து கொள்ள முடிகிறது. அந்த உள்நோக்கமான கேள்விக்கு நான் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன். இந்த நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்குத்தான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனென்றால் அவர் தான் என்னுடைய முதல் படத்தை தயாரித்தவர். அவர் என்னுடைய என்னுடைய கதையை மட்டுமே கேட்டார். அதைத் தவிர நான் எப்படி இருக்கிறேன், இதை என்னால் செய்ய முடியுமா முடியாதா என பார்க்கவில்லை. அவர் என்னை முழுவதுமாக நம்பினார் என தெரிவித்தார்.

 

இதனைப் போன்று தான் உலகத்தையும் நாம் பார்க்க வேண்டும். யாரையும் அவர்களின் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களின் திறமையை வைத்து மதிப்பிட வேண்டும் என அவர்களுக்கு உரைக்கும் விதமாகவும் நெற்றியில் அடித்தார் போலவும் இயக்குனர் அட்லீயின் பதில் மிகவும் சாதுரியமாக அமைந்தது.

 

இதனை இவரின் ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். அதிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.