திமுகவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட ஆ.ராசா!

0
83

விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து வருகிறார். தான் செய்த திட்டங்கள் போன்றவற்றை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறார். அதோடு தமிழக மக்களுக்காக நல்ல விஷயங்கள் எதையும் சொல்லிக் கொடுக்காமல் முதல்வரையும் அதிமுகவையும் குறை கூறி அவர் ஓட்டு கேட்டு வருகிறார். இதனால் தமிழக மக்கள் அனைவரும் திமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தமிழகம் முழுவதிலும் திமுக மீது இருந்து வரும் அதிருப்தி அலை தற்போது நடந்த ஒரு சம்பவத்தால் மேலும் அதிகரித்து இருக்கிறது.திமுகவை சார்ந்த ஆ .ராசா மேற்கொண்ட ஒரு பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக பேசி இருக்கிறார்0 அவர் பேசியதாவது பொதுவாழ்வில் எடப்பாடி பழனிச்சாமி வந்திருக்கும் உயரம் பெரிதல்ல நல்ல உறவில் நல்ல முறையில் பிறந்த ஆரோக்கியமான குழந்தை தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்று சொன்னால் கள்ள உறவில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று ஆ ராசா தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிற பதில் நான் ஒரு சாதாரண விவசாயி ஆனால் ஸ்டாலின் அளவிற்கு என்னால் வர இயலாது என்கிற ரீதியில் அவர் பதில் தெரிவித்திருக்கிறா.ர் இதன் காரணமாக, திமுக மீதும் ஆ.ராசா மீதும் தமிழக மக்கள் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

கடந்த பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் திமுகவைச் சார்ந்த முக்கிய தலைவர்களும் மற்றும் அந்த கட்சியின் தலைமையும் எதை பேசுகிறோம் எதைப் பேசினால் எந்த மாதிரியான பின்விளைவுகள் வரும் என்று யோசிக்காமல் வாயில் வந்ததையெல்லாம் பேசி விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய 6 கோடி மக்களின் பிரதிநிதியாக இருந்து வரும் ஒரு முதலமைச்சரை இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ராசாவிற்கு தமிழகம் முழுவதிலும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.