பட வாய்ப்புகளே வரலை! திடீரென்று கிளாமரில் களம் இறங்கிய சண்டக்கோழி மீரா ஜாஸ்மீன்!
மீரா ஜாஸ்மின் கேரளாவை சேர்ந்தவர். இவர் திரையுலகிற்கு முதன்முதலில் கேரளா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாள நடிகைகளில் அதிக படியான சம்பளம் வாங்குவதில் இவரும் ஒருவர்.
இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதன்முதலில் ரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா போன்ற படங்களை கொடுத்தார். இவர் மற்றும் விஷால் நடித்த சண்டைக்கோழி திரைப்படம் பெரும் ஹிட்டடித்தது. சண்டக்கோழி இரண்டாம் பாகம் வெளிவந்தாலும் முதல் பாகத்திற்கு ஈடாகவில்லை.
இவர் கடைசியாக நேபாளி என்ற தமிழ் திரைப் படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு துபாயில் பொறியாளராக பணி புரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது எந்தவித படவாய்ப்புகளும் இன்றி உள்ளார். இந்நிலையில் படவாய்ப்புக்காக கிளாமரான போட்டோ ஷீட்களை அவ்வப்போது நடத்தி வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாததால் இவ்வாறான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.