Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாத கடவுளின் படங்கள்..!! பராமரிக்கும் முறை..!!

பொதுவாக நாம் வீடு கட்டும்பொழுது கடவுளுக்காக என ஒரு பூஜை அறையை ஒதுக்கி விடுவோம். பூஜை அறையில் அழுக்கு, தூசு, ஒட்டடை என படிய விடக்கூடாது. அதேபோன்று வம்சா வம்சமாக சாமி படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம் என பலவிதமான படங்களை பூஜையறையில் வைத்திருப்பர். அந்தப் படம் நன்றாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எங்களது பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திய சுவாமி புகைப்படம் என்று, புகைப்படங்கள் உடைந்து இருந்தாலும் ஒரு சிலர் அதனை பூஜை அறையில் வைத்திருப்பர். ஆனால் உடைந்த படங்களை கண்டிப்பாக பூஜை அறையில் வைத்திருக்கக் கூடாது.

அந்த சுவாமி படத்தை சரி செய்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். சிலைகள் உடைந்து இருந்தால் அதனை நமது வீட்டுப் பெரியவர்கள் எவ்வாறு கூறுகிறார்களோ, அந்த முறையில் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீர் நிலையங்களில் அதனை விட்டு விட வேண்டும்.

ஒரு சில வீடுகளில் கடைகளில் சிறிய சிறிய சுவாமி புகைப்படங்களை கொடுப்பார்கள், அதனை தூக்கி எறிய மனம் இல்லாமல் பூஜை அறையில் உள்ள சுவாமி படத்தில் சொருகி வைத்து விடுவார்கள். அவ்வாறும் செய்யக்கூடாது. ஒரு சுவாமி புகைப்படத்தில் இன்னொரு சுவாமி புகைப்படத்தை சேர்த்து வைக்கக் கூடாது.

நமது பூஜை அறையில் சுவாமி புகைப்படங்களை கிழக்கு நோக்கி பார்த்தவாறு வைப்பது சிறப்பு. மேற்கு பார்த்தவாரும் சுவாமி புகைப்படத்தை மாட்டலாம். அதேபோன்று வடக்கு பார்த்த வாரும் சுவாமி புகைப்படத்தை வைக்கலாம். ஆனால் தெற்கு நோக்கியவாறு தட்சணாமூர்த்தி, நடராஜர் இதுபோன்ற புகைப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும்.

நமது வீட்டின் பூஜையறையில் பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி, முருகன், விநாயகர் ஆகிய ஐவரும் சேர்ந்தவாறு இருக்கக் கூடிய புகைப்படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். நமது குடும்பத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் இந்த ஐந்து கடவுள்களுமே கொடுத்து விடுவார்கள். இதில் பிள்ளையார் நமது வினைகளை தீர்த்து தரக்கூடியவர். சரஸ்வதி தாயார் அவர்கள் படிப்பு, ஞானம் ஆகியவற்றை தரக்கூடியவர்.

லட்சுமி தாயார் அவர்கள் நமக்கு வேண்டும் என்கின்ற செல்வங்களை தரக்கூடியவர். குடும்ப ஒற்றுமையை தரக்கூடியவர் பெருமாள். முருகன் என்பவர் நமக்கு இருக்கக்கூடிய துன்பம் மற்றும் பிரச்சனைகளை தீர்த்து தரக்கூடியவர். எனவேதான் இந்த ஐந்து சுவாமிகளும் சேர்ந்த புகைப்படம் கண்டிப்பாக நமது பூஜை அறையில் இருக்க வேண்டும்.

அதேபோன்று அம்பாள் புகைப்படங்களையும் நமது வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொள்ளலாம். திருப்பதி பெருமாளையும் பெரிய புகைப்படம் ஆக நமது வீட்டில் வைத்துக் கொள்ளலாம். மேலும் நமது இஷ்ட தெய்வமாக உள்ள அனைத்து கடவுளின் புகைப்படங்களையும் வைத்துக் கொள்ளலாம்.

சிவனை நமது வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால் சிவனையும் நமது வீட்டில் வைத்து வழிபடலாம். சிவலிங்கம் வைத்தும் வழிபடலாம். ஆனால் சிவலிங்கத்திற்கு தகுந்த அபிஷேகமும், நெய்வேத்தியமும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதேபோன்று சிறிய அளவிலான விக்கிரகங்களையும் வைத்து வழிபடலாம்.

நாம் ஒரு கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கிருந்து ஒரு சுவாமி புகைப்படத்தை வாங்கி வருவோம். அந்த புகைப்படத்தை நமது பூஜை அறையில் வைக்கும் பொழுது அதற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் இதனை வைத்துவிட்டு, அந்த சுவாமிக்கு ஏற்ற பூக்களை வைத்து, அந்த சுவாமிக்கு ஏற்ற மூல மந்திரத்தையும் கூற வேண்டும். இவ்வாறு நாம் வாங்கி வந்த புதிய சுவாமி புகைப்படத்திற்கு தினமும் செய்தால் மட்டுமே அந்த கடவுளின் சக்தி நமது வீட்டில் வந்து குடியேறும்.

ஐயப்பன், ஆஞ்சநேயர் மற்றும் உத்திரமாக உள்ள சுவாமி படங்களை பூஜை அறையில் வைக்க கூடாது என்று கூறுவார்கள். இந்த புகைப்படங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு என தனி பூஜை அறையும், அதிகமான சுத்த பத்தம் என்பதும் மிக மிக அவசியம். குலதெய்வத்தின் புகைப்படங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் சனீஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் நமது முன்னோர்களின் புகைப்படங்களை கண்டிப்பாக பூஜை அறையில் வைக்க கூடாது.

Exit mobile version