தொண்டைப்புண் தொண்டை கரகரப்பிற்கு உடனடி நிவாரணம்!

0
332

தொண்டைப்புண் தொண்டை கரகரப்பிற்கு உடனடி நிவாரணம்!

குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அனைவரும் எடுத்துக் கொள்ளும் உணவில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அதன்மூலம் சளி காய்ச்சல் தொண்டை வலி என அனைத்தும் அடுக்கடுக்காக ஏற்படும். பருவநிலை மாற்றத்தால் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

இனிப்பு மற்றும் குளிர் சார்ந்த பொருட்களை சாப்பிட்டாலே இச்சமயத்தில் நமக்கு சளி தொண்டை வலி போன்றவை ஏற்பட்டு விடும். தொண்டைப்புண் குணமாக ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று வேளை தொடர்ந்து கொண்டு வந்தால் தொண்டையில் உள்ள புண் அப்படியே சரியாகும்.

இதற்கு அடுத்தபடியாக நாட்டு மருந்து கடைகளில் திரிபலா சூரணம் கிடைக்கும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்தத் தண்ணீரில் திரிபலா சூரணத்தை சேர்க்க வேண்டும். அதோடு கிருமி நாசினியாக பயன்படும் மஞ்சள் தூளையும் சேர்க்க வேண்டும்.

நீர் நன்றாக கொதித்ததும் தீயை அணைத்துவிட்டு ஆறவிட வேண்டும். பின்பு அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் விரைவில் குணமாகும். இதற்கு அடுத்தபடியாக ஒரு ஸ்பூன் மிளகை எடுத்து வாணலில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.அத்துடன்சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதிக்க விட்ட தண்ணீரை வடிகட்டி அத்துடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வர சீக்கிரம் தொண்டை புண் சரியாகும்.