நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் எள் உருண்டை : 10 நிமிடத்தில் சுவையாக செய்வது எப்படின்னு தெரியுமா?

0
70

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் எள் உருண்டை : 10 நிமிடத்தில் சுவையாக செய்வது எப்படின்னு தெரியுமா?

எள்ளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. எள்ளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரும். மேலும், எள்ளை உருண்டையாக செய்து குழந்தைகளுக்கு அடிக்கடி சாப்பிட கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நோய் பாதிப்புலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

மேலும், ஜூரம், சளி போன்ற பாதிப்புகள் விரைவில் குணமாகும். எள் உண்டை சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட வியாதி ஏற்படாது. எள் எண்ணெய்கள் உடலின் தோலின் பளபளப்பைத் தரும். தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி சிரங்கு படை பாதிப்புகளை கூடிய விரைவில் எள் நீக்கும்.

சரி, இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட எள்ளில் எப்படி சுவையாக உருண்டை செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள் :

எள் – 2 கப்

வெல்லம் – அரை கப்

பொட்டுக்கடலை – கால் கப்

வேர்க்கடலை – கால் கப்

நெய் – 1 ஸ்பூன்

செய்முறை –

முதலில் ஒரு பாத்திரத்தில் எள்ளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள கொண்டும்.

பின்னர், வேர்க்கடலை தோல் வீக்கி வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸியில் எள், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டு நெய் விட்டு உருண்டையாக பிடித்தால் சுவையான எள் உருண்டை ரெடி.