தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தனர். இதனால் பள்ளிகளில் மழை நீர் புகுந்தனர். இதனால் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டத்து. இதனால் டிசம்பர் மாதம் நடக்க இருந்த 10-ம், 11-ம், 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி நடங்க இருந்த நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது.
டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வு மழை பாதிப்பு காரணமாக ஜனவரி மாதம் நடத்தப்படும்.
அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம்.
தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ் வைத்திருக்கும் அறைகள் தரைதளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
டிசம்பரில் நடத்த திட்டமிட்டுள்ள அரையாண்டு தேர்வு, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீர் தேங்கியிருப்பின் ஜனவரியில் நடத்தப்படும்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.