Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு!

Important Announcement by TNSTC !! Call for Pongal Holiday Booking!

Important Announcement by TNSTC !! Call for Pongal Holiday Booking!

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு!

பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவு செய்வதற்க்கான அறிவிப்பை TNSTC இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் என்றாலே களைக்கட்டும். பல்வேறு பகுதிகளில் தங்கள் பணியின் நிமித்தம் பணிபுரியும் ஆண்,பெண் மற்றும் கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வதுண்டு.

அதற்காக மக்கள் பொது போக்குவரத்தான பேருந்து மற்றும் இரயில் வழி பயணங்களையே பயன்படுத்துவர்.பண்டிகை காலங்களில் இரயில் , பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலை மோதும். சிலர் பண்டிகைக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்வதுண்டு. சிலர் டிக்கெட் கிடைக்காமல் அல்லல்படுவதும் உண்டு.

பண்டிகை காலங்களில் அரசு தலைநகர் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவதுண்டு.இரு ஆண்டுகளாக கொரோனாவில் மக்கள் முடங்கி கிடந்ததால் பண்டிகை காலங்கள் வெறிச்சோடி கிடந்தன. கொரோனா காலக்கட்டம் முடிந்து மக்கள் ஓரளவிற்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதும் பண்டிகை கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கி விட்டன.

தீபாவளி சமயத்தில் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 0CT-21,22,23 ஆகிய தினங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.அதன்படி சென்னையில் வழக்கமான பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 6370 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10588, பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் அடுத்த மாதம் ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் பல்வேறு ஊர்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி கொண்டு உள்ளனர்.தீபாவளி சமயத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் சற்று முன்னதாகவே பயணத்தை பதிவு செய்யும் வகையில் TNSTC அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதன்படி சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் வருகின்ற ஜனவரி 13-ந் தேதி பயணம் செய்வதற்கு  www.tnstc.in  என்ற இணைய தளம் மற்றும் TNSTC என்ற செயலி வழியாகவும் பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Exit mobile version