Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு வராமல் தடுக்க இதை செய்யுங்கள்-சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

AIADMK Minister Thangamani Infected By Covid 19

AIADMK Minister Thangamani Infected By Covid 19

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு வராமல் தடுக்க இதை செய்யுங்கள்-சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையிலிருந்து மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் திடீரென உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பாதிப்பு தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில் பரவிவரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து தவிர்க்க, அதிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் மற்றும் யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
உலகின் பல நாடுகளில் பரவி வருகின்ற உருமாறிய ஒமைக்ரான் பாதிப்புகள் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்து விட்டது.  தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மட்டுமே 130 க்கும் மேற்பட்டோருக்கு அதிகாரபூர்வமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான் அடுத்தடுத்து ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது.  மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான்  பாதிப்பிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சுகாதார துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், இதற்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில், மிதமான அறிகுறி, பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது
மேலும் மருத்துவரின் பரிந்துரைப்படி, ‘பாராசிட்டமால்’, ‘போலிக்’ ஆசிட் மாத்திரை, பத்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். படுக்கையில் குப்புறப்படுத்து கொள்வதும், அதிக தண்ணீர் அருந்தும் அவசியம். ரத்த ஆக்சிஜன் அளவை ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டர்’ கொண்டு, ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். ரத்த ஆக்சிஜன் அளவானது தொடர்ந்து 92 ஆக இருப்பது உறுதி செய்ய கண்காணித்து கொண்டிருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாத இணை நோயாளிகளுக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தால் உடனடியாக கண்காணிப்பு மையத்தை அணுகி அங்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். மேலும் தடுப்பூசி செலுத்தி விட்டு இணைநோய் எதுவுமில்லாதவர் தங்கள் வீடுகளிலேயே அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம்.
குறிப்பாக வீடுகளில் தனிமைப்படுத்துவோர் மருத்துவர் கூறும் அறிவுரைகளை பின்பற்றி, அதற்கான மருந்துகளை சாப்பிட்டு ஓய்வில் இருக்க வேண்டுமென்பது அவசியம். மேலும் கொரோனா அறிகுறி வந்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் ஆக்சிஜன் தேவைப்படுவோர், இணைநோய் உள்ளவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களை சார்ந்தவர்கள் என அனைவரும் கட்டாயம் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exit mobile version