Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிக மிக அவசரம் உடனே இதை செய்யுங்கள்!

தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

இதன் மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் அவரவர் மாவட்டத்திலேயே பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக சேகரிக்கபடுவதில்லை. ஆகவே மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்களின் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு அந்த ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பணி பெற்று வருகிறார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இந்த சூழ்நிலையில், மாவட்ட மாறுதலில் சென்ற ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திலிருந்து எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெற்றிருக்கிறார்கள் என்றும், அந்த மாவட்டத்திற்குரிய பெயர், முகவரி என எல்லாவற்றையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதிவுசெய்து அனுப்புமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விவரங்கள் எதுவும் அனுப்பபடாமலிருக்கும் ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய விவரங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அரசுக்கு இன்று மாலைக்குள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் யார் என்ற விவரங்களை இன்றைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Exit mobile version