Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் தொற்றின் தாக்கம் குறைந்ததையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மற்றும் கொரோனாவின் பரவல் நாடெங்கும் வேகமாக பரவி வந்தது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்திலும் இந்த தொற்றின் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.

அதனை தொடர்ந்து, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தொற்றின் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதனிடையே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். எனவே, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், விரைவில் அவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு நாளை  வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version