TET தேர்வு எழுதுவர்களுக்கு முக்கிய வெளியிட்ட அறிவிப்பு! அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
TET தேர்வு கம்ப்யூட்டர் மூலம் எழுதுவதற்காக பயிற்சி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்விக்காக ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பப்படுகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதி தேர்வு.
இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கானதேர்வாகும். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதி அதற்கான தகுதி மதிப்பெண்ணை பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்காக அறிவிப்பை வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முதலில் மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
மேலும் இவர்களுக்காக கம்ப்யூட்டர் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியருக்கான தாள் ஒன்றுக்கு மட்டும் முதல் கட்டணம் ஆக தேர்வுகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்விற்கு 15 ஆம் நாளுக்கு முன்னர் விண்ணப்பித்தார்கள் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அதுமட்டுமின்றி பயிற்சி மேற்கொள்வது குறித்து அறிவிப்பு மற்றும் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இவர்களுக்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வார்கள் ஆசிரியர் தேர்வு வாரியா இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.