சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு !! இதை செய்யாவிட்டால் இனி ரேஷன் கார்ட் செல்லாது !!

0
137

கடந்த 3 மாதமாக ,தமிழகத்தில் பிரதமரின் விவசாயத்திற்காக வழங்கும் ‘கிசான் திட்டம்’ ஊக்கத்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் , தமிழகத்தில் 110 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றிருப்பதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பிரதமரின் உழவர் ஊக்கத் தொகை திட்டத்தில் புதியதாக பயனாளர்களை சேர்க்க வேண்டாம் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும், இனிமேல் மாவட்ட அளவில் சேர்க்கை நடைபெற்று வரும் என்றும் ,இனி மாநில அளவில் பயனாளர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முறைகேடுகளில் ஈடுபட்ட, விவசாயிகளிடமிருந்த வங்கிக் கணக்கு பணத்தை திரும்பப் பெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 32 கோடி ரூபாய் திரும்ப பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்தில் திரும்பப் பெறவேண்டும் என்று வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் விவசாயங்கள் ஊக்கத் தொகை திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், திரும்ப பணம் செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.இதனால் நாளை (செப்டம்பர் 14) மாலைக்குள் பணம் திருப்பி செலுத்தாவிட்டால், ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.இதனால் முறைகேடாக பணம் பெற்றவர்கள் ரேஷன் கார்டுகளை முழுமையாக நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி மாலைக்குள் பணத்தை செலுத்தி உரிய ஆவணத்தை பெறவேண்டும் என்று தண்டோரா மூலம் மக்களிடையே அறிவுறுத்தப்பட்டுள்ளது.