9- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! 

0
95
important-announcement-issued-by-government-examinations-for-the-students-of-class-9

 அரசு தேர்வுகள் இயக்ககம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது,

அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2024 – 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அடுத்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்விற்கு தேவைப்படும் தகுதிகளாவன,

* தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருமானச் சாற்றினை வருவாய் துறையினரிடம் வருவாய் சான்றிதழ் பெற்று அளித்தல் வேண்டும்.

* ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024 – 2025 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியர் இந்த தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர் ஆவார்.

ஆனால் நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவ ,மாணவியர் www.dge.tn.gov.in என்ற விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் ரூ.5 மற்றும் சேவை கட்டணம் ரூ.5 என  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க 20-11-2024 வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த தேர்வின் மூலம் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவர்கள், 50 மாணவியர்கள்) அவர்களின் 9 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படும்.

மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஊரக திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.