எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

0
211

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இனி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து இணையதளம் வாயிலாகவும் ஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவற்றை செய்து வருகின்றது.

 

இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வந்தாலும் பல கெடுபுடியான மோசடிகள் நடைபெற்று தான் வருகின்றது. இதனை தடுக்க பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஒடிபி முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு தாயிரம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி எண் வரும் அதை பதிவிட்டால் மட்டுமே பணம் எடுக்க வேண்டும்.

 

இதனைத் தொடர்ந்து ஒடிபி எண்ணை வாடிக்கையாளர்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.இந்த புதிய திட்டத்தின் மூலம் ஏடிஎம் கார்டுகளை திருடிச் சென்று பணத்தை எடுப்பதும் பாஸ்வேர்டை அறிந்து கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற மோசடிகளை தடுக்க முடியும் என்று எஸ்பிஐ வங்கி கூறுகிறது.இந்த ஒடிபி முறை ஏடிஎம்களில் பண பாதுகாப்பை அளிப்பதால் எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து மற்ற வங்கிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பணம் எடுக்கப் போகும் வாடிக்கையாளர்கள் தங்களின் கைகளில் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருப்பது மிகவும் அவசியம்.

 

ஏடிஎம் இயந்திரத்தில் வழக்கம்போல் டெபிட் கார்டை உள்ளிட்டு உங்களின் பின் நம்பரை பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஒன்றிலிருந்து நூறு கோள் ஏதாவது ஒரு என்னை அழுத்த பின்னர் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.நீங்கள் எடுக்கவிருக்கும் தொகை பத்தாயிரம் எனில் தொகையை பதிவிட்ட உடன் உங்களின் மொபைலுக்கு இரு ஒடிபி எண் குறுஞ்செய்தியாக வரும். அந்த ஓடிபி எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் கேட்கும் திரையில் பதிவிட வேண்டும். அதன் பிறகு உங்கள் தொகை உங்களுக்கு கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் சேஃப்டியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மோசடி பெருமளவு குறையும்.