Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பயணிகளின் கவனத்திற்கு இந்த தேதிகளில் இங்கு ரயில்கள் இயங்காது!

Important announcement issued by Southern Railway! Attention passengers trains will not operate here on these dates!

Important announcement issued by Southern Railway! Attention passengers trains will not operate here on these dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பயணிகளின் கவனத்திற்கு இந்த தேதிகளில் இங்கு ரயில்கள் இயங்காது!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருமங்கலம் உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களானது ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் காரைக்குடி இடையில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. காரைக்குடி சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் 17ஆம் தேதி முதல் 28 ம் தேதிக்கு இடையில் ஏழு நாட்களுக்கும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 10.05 மணிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் 19,24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதனை அடுத்து மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 10 50 மணிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் 16,17,19,25 போன்ற தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் வரும் 22,24,27 ஆம் தேதிகளிலும் மதுரையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புறப்படும் அதிவேக ரயில் 23,26 மற்றும் 28ம் தேதிகளிலும் இயங்காது. பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு திருச்செந்தூர்  அதி விரைவுரயிலும் திருச்செந்தூரில் இருந்து புறப்படும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயிலும் நேற்று முதல் வரும் 28ஆம் தேதி வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version