வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
மலைகளின் இளவரசியாக விளங்கி வரும் சுற்றுலா தளம் கொடைக்கானல்.பேரிஜம் என்ற ஏரி உள்ளது. மேலும் இந்த ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இந்த ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தப்படியே பயணம் செய்யலாம் என்பதால் தான் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு செல்ல வேண்டும் என்றால் வனத்துறை சோதனை சாவடியில் முன் அனுமதி டிக்கெட் பெற வேண்டும். மேலும் அங்கு உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இவை குடிநீர் மற்றும் உணவு தேடி வரும் பொழுது தடம் மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன. அதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வனவிலங்கு நடமாட்டம் இருந்தால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை தடுத்து வருகின்றனர்.
காட்டு யானை, காட்டு எருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்வதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றது. தற்போது பேரிஜம் ஏரிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்துள்ளது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு ஏரிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்,
இது குறித்து அவர்கள் கூறுகையில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சாரல் மழை பெய்தாலும் வறண்ட நிலையை நிலவுகின்றது இதன் காரணமாக அடிக்கடி காட்டு தீ பரவி வருகிறது. அதனை அணைக்கும் முயற்சியில் தீ தடுப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
வனவிலங்குகள் இடம்பெயரும் போது குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுகின்றன எனவே அவற்றின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றோம் தற்போது ஏரிக்குள் யானை கூட்டம் புகுந்துள்ளது. அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.