வானிலை வரலாற்றில் முதல் முறையாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0
130

வானிலை வரலாற்றில் முதல் முறையாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை வரலாற்றில் முதல் முறையாக மார்ச் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழக பகுதிகளை நெருங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இது வரை இருக்கக்கூடிய வானிலை வரலாற்றின் அடிப்படையில் தமிழகத்தை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வருகிற 7-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.