இந்தியன் ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 2 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!!

0
71
Important Announcement of Indian Railways!! Trains canceled till December 2!!

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகள் தங்களுடைய பயணத்தில் நிம்மதியாக செல்லும் வகையில் பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. தற்சமயம் அந்த திட்டங்களை ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணமாகவும் அமைந்துவிட்டது.

வரும் நாட்களில் நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டால், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை முன்கூட்டியே சரிபார்க்கவும்.

டிசம்பர் 2 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்கள் :-

✓ பிலாஸ்பூரிலிருந்து இயக்கப்படும் 18234 பிலாஸ்பூர்-இந்தூர் நர்மதா எக்ஸ்பிரஸ் நவம்பர் 23 முதல் 30 வரை ரத்து.

✓ 18233 இந்தூரில் இருந்து இயக்கப்படும் இந்தூர்-பிலாஸ்பூர் நர்மதா எக்ஸ்பிரஸ் நவம்பர் 23 முதல் டிசம்பர் 1 வரை ரத்து.

✓ நவம்பர் 23 முதல் 30 வரை பிலாஸ்பூரிலிருந்து புறப்படும் ரயில் எண் 18236 பிலாஸ்பூர்-போபால் எக்ஸ்பிரஸ் ரத்து.

✓ நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 வரை போபாலில் இருந்து புறப்படும் ரயில் எண் 18235 போபால்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரத்து.

✓ ஜபல்பூரில் இருந்து இயக்கப்படும் 11265 ஜபல்பூர்-அம்பிகாபூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 23 முதல் 30 வரை ரத்து.

✓ அம்பிகாபூரிலிருந்து இயக்கப்படும் 11266 அம்பிகாபூர்-ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 24 முதல் டிசம்பர் 1 வரை ரத்து.

✓ பிலாஸ்பூரிலிருந்து இயங்கும் 18247 பிலாஸ்பூர்-ரேவா எக்ஸ்பிரஸ் நவம்பர் 23 முதல் 30 வரை ரத்து.

✓ ரேவாவில் இருந்து இயக்கப்படும் 18248 ரேவா-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 23 முதல் டிசம்பர் 1 வரை ரத்து.

✓ 12535 லக்னோ-ராய்ப்பூர் கரிப் ரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரத்து.

✓ 12536 ராய்ப்பூர்-லக்னோ கரிப் ரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ராய்ப்பூரில் இருந்து இயக்கப்படும்.

✓ நவம்பர் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் துர்க்கில் இருந்து புறப்படும் ரயில் எண் 22867 துர்க்-நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரத்து.

✓ நவம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நிஜாமுதீனில் இருந்து புறப்படும் ரயில் எண் 22868 நிஜாமுதீன்-துர்க் எக்ஸ்பிரஸ் ரத்து.

✓ 18203 துர்க்-கான்பூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் துர்க்கிலிருந்து இயக்கப்படும்.

✓ நவம்பர் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கான்பூரில் இருந்து இயக்கப்படும் 18204 கான்பூர்-துர்க் எக்ஸ்பிரஸ் ரத்து.

குறிப்பு :-

இந்திய இரயில்வே பயணிகளுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில் குறுஞ்செய்தி மூலம் ரயில் ரத்து குறித்து தெரிவிக்கிறது. இருப்பினும், பயணிகள் ரயிலின் தற்போதைய நிலையை வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் 139 என்ற எண்ணில் Rail Madad ஹெல்ப்லைனை அழைப்பதன் மூலம் உறுதிப்படுத்துவது நல்லது.