Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!! 5000 காலிப் பணியிடங்கள்!! காத்திருக்கும் வேலைவாய்ப்பு!!

Important Announcement of Tamil Nadu Govt!! 5000 vacancies!! Awaiting Employment!!

Important Announcement of Tamil Nadu Govt!! 5000 vacancies!! Awaiting Employment!!

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை வேலையின்மை. இதற்கு முக்கிய காரணம் தகுதி இருந்தும் குறைவான சம்பளம் கிடைப்பது. இதனால் பல பேர் வேலைக்கு செல்ல விரும்புவதில்லை. ஆனால் நம் தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கிட்டதட்ட சுமார் 5000 காலிப் பணியிடங்கள் மற்றும் அதற்கான பணியாளர் தேர்வு நடைபெறவுள்ளது என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 16.11.2024 [சனிக்கிழமை] அன்று காலை மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஸ்ரீ விஜய்சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- திருப்பத்தூர் 635 601 என்ற இடத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.

கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, மேலும் ஐ.டி.ஐ, டிப்ளமோ நர்சிங், பார்மசி, பொறியியல். www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04179- 2220333  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள தொழில் நிறுவங்களில் வேலை கிடைக்கும் எனவும் இந்த வேலை வாய்ப்புகளுக்கு கலந்துகொள்ள அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Exit mobile version