தமிழக அரசு அறிவித்த அதிரடி தளர்வு!
தமிழகத்தில் தொழில் துறை சார்ந்த பணிகள் மேம்படுவதற்கான ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த அடுத்த நிமிடமே எந்த ஊருக்கு வேணாலும் போகலாம் என்று இ- பாஸ் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் போக்குவரத்திற்காக தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இ – பாஸ் விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிற மாநிலங்களில் இருந்து தொழில் சம்பந்தமாக தமிழகம் வருவோருக்கு உடனடியாக இ – பாஸ் வழங்கப்படும். மேலும் தமிழகம் வந்து 72 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்கு தனிமைப் படுத்துதல் இல்லை என தெரிவித்துள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு இ பாஸ் இல்லாமல் தமிழகம் வரலாம். 3 நாட்கள் தங்கலாம். 3 நாட்களுக்குள் திரும்பி சென்றார்கள் என்றால் அவர்களுக்கு தனிமைப்படுத்த தேவையில்லை. அதேபோல் தொழில்துறையினர், திரைத்துறையினர், சட்டப் பணி ,ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சார்ந்த பணிகளுக்கு வருவோருக்கும் தனிமைப்படுத்துதல் கிடையாது.
தொழிற்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக இ-பாஸ் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.தொழில் வளர்ச்சி மேம்படும் மற்றும் மக்களின் நிலை உயரம் என்பதற்காக இந்த விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.