சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

0
113

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவல் அச்சுறுத்தலின் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் வகுப்புகள் சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

மேலும், கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படது. அதுபோல் இந்தமுறையும் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக, விரைவாக பாடங்களை நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து தேர்வுக்கான ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து வருகிறது.

அந்த வகையில், தற்போது இந்த கல்வியாண்டில் பயிலும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ (CBSE) நிர்வாகம் ஏற்கனவே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் முதல் பருவத்தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், தற்போது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு குறித்த அறிவிப்பை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுபாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுக்குரிய மாதிரி வினாத்தாள் சி.பி.எஸ்.இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், அதேப்போல் வினாத்தாளும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நடந்த தேர்வுகளின் போது ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே தற்போது நடைபெற உள்ள இரண்டாம் பருவத்தேர்வுக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கான முழு தேர்வு அட்டவணை விரைவில் சி.பி.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தள்ளார்.