மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் அனைத்து நலத் திட்டங்கள் மற்றும் பிற சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.இந்தியா நாட்டின் குடிமகன்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் திகழ்கிறது.
இந்நிலையில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கடந்த ஜூன் 14 வரை அவகாசம் வழங்கப்பட்டது.அதன் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.கால அவகாசம் முடிய இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருபதால் இதுவரை ஆதார் அப்டேட் செய்யாதவர்கள் விரைவில் செய்து முடிக்க மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது.
ஆதார் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குற்றங்களை தடுக்க கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் அட்டையை புதுப்பிக்காதவர்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்திருக்கிறது.
ஆதார் கார்டை அப்டேட் செய்வது எப்படி?
படி 01:
UIDAI-இன் https://ssup.uidai.gov.in/ssup/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பின்னர் உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்து தங்களின் ஆதார் நம்பரை என்டர் செய்யவும்.
படி 02:
அதன் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு செய்து OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
படி 03:
இவ்வாறு செய்த உடன் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பி வைக்கப்படும்.அந்த எண்ணை பதிவு செய்யவும்.அதன் பின்னர் “ஆன்லைனில் ஆதார் புதுப்பிக்கவும்” ன்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆதாரில் தங்கள் விவரங்களை புதுப்பிக்கவும்.15 நாட்களில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.அதன் பிறகு நீங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புகைப்படும் கருவிழி,கை ரேகை பதிவு செய்ய ஆதார் மையத்தில் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.மொபைல் எண்,முகவரி,பிறந்த தேதி உள்ளிட்டவற்றை மாற்ற ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.