இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு! தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! 

0
303
Important announcement this evening! Dramatic change in the Tamil Nadu Cabinet!

 

DMK: முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன் அமைச்சரவையில் மாற்றம் வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

தமிழக அமைச்சரவையில் இன்று(ஆகஸ்ட்22)           மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு சீனியர் அமைச்சர்களின் பதவி பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று(ஆகஸ்ட்22) மாலை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் அறிவிக்கின்றது.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு 17 நாட்கள் தங்கி இருந்து அமெரிக்காவில் நடக்கும் பல்வேறு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் செப்டம்பர் 12ம் தேதி தமிழகம் திரும்பவுள்ளார்.

முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் இந்த அமெரிக்க பயணத்தில் முக்கிய நிறுவறங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். மேலும் 500 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாகவும் பேசவுள்ளார். இதையடுத்து தமிழக அமைச்சரவையில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

அதாவது திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு 4 ஆண்டுகள் ஆகி விட்டது. 4வது ஆண்டில் திமுக கட்சி பயணிக்கும் நிலையில் இதுவரை திமுக அமைச்சரவையில் செய்யப்படாத வகையில் இந்தமுறை மிகப் பெரிய மாற்றம் செய்யப்படவுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது.

இந்த முறை அமைச்சரவையில் மூன்று சீனியர் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பதிலாக மூன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகின்றது. அதாவது திமுக கட்சி பலவீனமாக இருக்கும் பகுதிகளை அடிப்படையாக கொண்டும் அமைச்சரவையில் முக்கியத்துவம் இல்லாத மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த மூன்று புதிய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப் படவுள்ளனர்.  மூன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு மட்டுமில்லாமல் அமைச்சரவையில் அமைச்சர்களின் பதவிகளின் மாற்றமும் பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆவடி நாசர் அவர்கள் அமைச்சராக சேர்க்கப்படலாம் என்றும் தற்பொழுது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் கோவி செழியன் மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இருப்பினும் இது குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.