Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் கர்ப்பம் தரிக்க போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஆரம்ப கால முக்கிய அறிகுறிகள்!!

பொதுவாக பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை மாதவிடாய் தள்ளிப்போதல் மூலம் உறுதி செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து உங்கள் கர்ப்பத்தை அறிந்து கொள்ளலாம்.

திருமணமான தம்பதிகள் அனைவரும் குழந்தையை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.சிலருக்கு விரைவில் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.சிலருக்கு மாதங்கள்,வருடங்கள் கூட ஆகலாம்.ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய தாய்மையை மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்புகின்றனர்.பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் தான் உணர்வுபூர்வமாக மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.

சிலர் உடலுவிற்கு பிறகு தங்கள் கர்ப்பத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.ஆனால் எல்லா நேரங்களிலும் அவை பாசிட்டிவாக இருப்பதில்லை.இதனால் அவர்களின் எதிர்பார்ப்பு வீணாகி சோர்வாகிவிடுகிறீர்கள்.பெண்கள் தங்கள் மாதவிடாய் தொடங்கிய 12 நாட்களில் இருந்து 20 நாட்களுக்குள் துணையுடன் இணைந்தால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் கர்ப்பம் தரிக்க ஆணினின் விந்தணு தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.அது மட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருப்பது அவசியம்.கரு முட்டையில் விந்தணு சென்ற பிறகு பெண்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.அந்த அறிகுறிகளை வைத்து தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

1)அடி வயிற்று பகுதியில் லேசான வலி
2)வயிறு இழுத்து பிடிப்பது போன்ற வலி
3)மிகவும் குறைவான அளவு இரத்தப்போக்கு
4)தசை பிடிப்பு
5)உடல் சோர்வு
6)காலையில் எழுந்திருக்க முடியாத நிலை
7)சிறிது தூரம் நடந்தாலே கால் வலித்தல் உணர்வு
8)மாடிப்படி ஏறினால் வாழ்த்தைவிட அதிகமாக மூச்சு வாங்குதல்
9)மார்பகம் தளர்தல்
10)தொடர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்
11)வயிறு,மார்பங்களில் அதிக அரிப்பு ஏற்படுதல்
12)மலச்சிக்கல்

பெண்களின் அண்ட விடுப்பின் 8 நாளில் லேசான உள்வைப்பு இரத்தப் போக்கு ஏற்படலாம்.அண்டவிடுப்பின் 14 நாளில் யோனி பகுதியில் அடர்த்தியான வெள்ளைப் படுதல் ஏற்படும்.

Exit mobile version