Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றிய முக்கிய தகவல்!! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

Important Information about Class 8 General Examination!! The announcement issued by the Department of School Education!!

Important Information about Class 8 General Examination!! The announcement issued by the Department of School Education!!

8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றிய முக்கிய தகவல்!! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் பொது தேர்வு பற்றிய தகவல்களை பள்ளிகல்வித்துறை அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஜூலை 31 ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவரகள அனைவரும் www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொது தேர்வு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் தேர்வு எழுத வரும் அனைவருக்கும் ஹால் டிக்கெட் கட்டாயம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version