தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்! 

0
186
Important information about Group 1 2 and VAO selection! Choose on this date?

தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்!

தமிழகத்தில் கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த இரண்டு ஆண்டுகளிலும் முக்கிய நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. அதாவது திருவிழாக்கள் முதல் அரசு தேர்வுகள் வரை எதுவும் நடைபெறவில்லை. இவைகள் நடைபெற இருந்தாள் கூட்டம் கூடும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அரசாங்கம் அதனை தவிர்த்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணியாளர்களை நியமிக்க தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணையை வெளியிட்டது.

2019ஆம் ஆண்டு வெளியிட்ட கால அட்டவணைப்படி ஒருசில தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டது. மேற்கொண்டு தொற்றும் பாதிப்பு தீவிரமடைந்ததால் பெரும்பாலான முக்கிய தேர்வுகள் நடத்தப்படவில்லை. 2019 முதல் 2021 வரை பல்வேறு துறைசார்ந்த தேர்வுகள் நடத்தப்படாததால் அதிக காலிப்பணியிடங்கள் காணப்படுகிறது. அதனால் பலர் அரசு தேர்வு என்னை காத்துக் கொண்டுள்ளனர். தற்பொழுது தொற்று பரவல் குறைந்து காணப்படுகிறது. மேலும் தடுப்பூசி நடைமுறைக்கு வந்து அனைவரும் செலுத்தி வருகின்றனர். அதனால் மீண்டும் தேர்வு நடத்துவதற்கான பல்வேறு ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமாக உள்ளது.

அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி கால அட்டவணையின்படி மீதமுள்ள தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று கூறுகின்றனர். அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் குரூப் 1 குரூப் 2 மற்றும் குரூப் 4, விஏஓ ஆகிய தேர்வுகள் நடத்துவதற்கான தேதிகளில் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று தமிழக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த தேர்வுகளை எந்தெந்த தேதியில் நடத்தலாம் என்று டிஎன்பிஎஸ்சி குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் ஆனது வரும் 27ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் குரூப்-1 குரூப்-2 குரூப்-4 மற்றும் VAO ஆகிய தேர்வுக்கான தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.