ஆன்லைன் முன்பதிவு குறித்து முக்கிய தகவல்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
திருப்பதியில் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதியது. கடந்த புரட்டாசி மூன்றாவது வாரத்தில் மட்டும் பல ஆயிரம் கணக்கான மக்கள் ஏழுமலையானை வழிபட காத்திருந்தனர். அந்த வகையில் 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள் நான்கு மணி நேரமும் ,அதுவே இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் 36 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட வேண்டி இருந்தது.
அவ்வாறு காத்திருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், டீ போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்திருந்தது. இதனையடுத்து மாதம்தோறும் திருப்பதியில் பல விழாக்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவம் இரண்டு ஆண்டுகளைக் கொரோனா காரணத்தினால் சரிவர கொண்டாட முடியவில்லை ,இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தற்பொழுது திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அடுத்த மாதத்திற்கான தங்கும் விடுதியின் முன்பதிவு இன்று முதல் தொடக்கம் என கூறியுள்ளனர்.அந்தவகையில் வரும் மாதம் திருப்பதிக்கு செல்ல நினைக்கும் பக்தர்கள் தாங்கள் தங்குவதற்கான விடுதி முன்பதிவை இன்றே செய்துகொள்ளலாம்.