அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா?
மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் பணம் போடப்பட்டுள்ளது. 11வது தவணை இன்றளவும் போடப்படவில்லை. அந்த பதினோராவது தவணை குறித்து விவசாயிகள் பெருமளவு காத்துக் கொண்டுள்ளனர்.
எப்பொழுதும் ஏப்ரல் முதல் வாரத்திலேயே இந்த மானியத் தொகை செலுத்தப்படும். ஆனால் ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது வரை செலுத்தவில்லை. திடீரென்று இந்த திட்டம் செல்லாது என மோடி கூறி விடுவாரோ என்றும் மக்கள் பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் எப்பொழுது மோடி அவர்கள் மக்கள் எதிர்பாராத நேரத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவதில் பெயர் போனவரே.ஆகையால் இந்த பிஎம் கிசன் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் குறித்து ஏதேனும் தகவல் வருமா என்று மக்கள் பெருமளவு காத்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் இணையத்தில் இந்த பதினோராவது தவணை அம்பேத்கர் பிறந்த நாளன்று போடப்படும் என செய்தி வைரலாக பரவி வருகிறது.
அம்பேத்கார் பிறந்தநாள் தினத்தன்று இந்தத் தொகை போடப்படுமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.பலவற்றின் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் மக்கள் அரசாங்கத்தின் மீது கோவத்தில் உள்ளனர்.இவ்வாறு இருக்கையில் தற்பொழுது வழக்கப்பட்டு வந்த தொகையும் தராமல் இழுத்து வருவது மேலும் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையே தரும்.