அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்!! CBSE ஊழியர்களுக்கு அடிக்கும் டபுள் புரோமஷன்!!

0
137
#image_title

அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்!! CBSE ஊழியர்களுக்கு அடிக்கும் டபுள் புரோமஷன்!!

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் CBSE ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது அதுபோல மத்திய அரசும் அகவிலைப்படியை உயர்த்தும் அறிவிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் 23ஆம் தேதி அகவிலைப்படி  4 %  வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் அகவிலைப்படியானது இரண்டு முறை உயர்த்தப்படும். ஏழாவது ஊதியகுழுவின்படி உயர்வானது  ஜனவரி  முதல் ஜூன் வரை மற்றும் ஜூலை –டிசம்பர் மாத இறுதிக்குள் இரண்டு கட்டமாக உயர்வு அளிக்கப்படும். ஊதிய உயர்வானது  38% இல் இருந்து 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது என்பது ஏற்கனவே அறிந்ததே.

அதுபோல அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்விற்கான காலம் இன்னும் இருக்கும் நிலையில் மத்திய அரசு முன்னரே அதாவது இந்த மாத இறுதிக்குல்லையே அறிவிப்பு வெளியிடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வானது ரேங்கிங் முறையில் உயர்த்தப்படும். அதற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை மத்திய அரசு நாளை அறிவிக்கிறது.அகவிலைப்படி எந்த அளவிற்க்கு உயரும் என்பதை  இந்த ரேங்கிங் அறிவிப்பை வைத்து முன்னரே யூகிக்க முடியும்.

பணவீக்கமானது உயர்ந்து கொண்டே  போகும் நிலையில் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் இதனால் ஏற்படும் விலை உயர்வை சமாளிக்கவே மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி  உயர்த்தப்படுகிறது.

அந்தவகையில் சிபிஎஸ்இ ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர்.அதில்,தனகளது ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என கேட்டுள்ளனர்.மேற்கொண்டு ஓய்வு பெறும் வயதை தாங்கள் தற்பொழுது வாங்கும் சம்பளத்துடன் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.இவர்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து விரைவில் ஆலோசனை செய்யப்படும் என கூறியுள்ளனர்.