9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்!
சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.அந்த தடுப்பூசிகள் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நடப்பு கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தான் பெண்கள் அதிக அளவு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் ஆண்டு தோறும் 80 ஆயிரம் பெண்கள் இந்த புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.அதனால் பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே அதற்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ட்டிஹமில்கத்தில் ஒன்பது வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.கூடிய விரைவில் மத்திய அரசு சார்பாக இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்ததை தொடர்ந்து மாணவிகள் அங்கன்வாடி மையங்களில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.